இந்தியா

இறப்பதற்கு முன் தாய் செய்த காரியம்.. புதைப்பதா? எரிப்பதா? என குழம்பிய மகன்கள்.. மகாராஷ்டிராவில் நடந்த வினோதம்

Summary:

உயிரிழந்த தாயின் உடலை எரிப்பதா, புதைப்பதா என மகன்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் மஹாராஷிட்ராவில் நடந்துள்ளது.

உயிரிழந்த தாயின் உடலை எரிப்பதா, புதைப்பதா என மகன்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் மஹாராஷிட்ராவில் நடந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஃபுலாய் தபாடே என்ற 65 வயது பெண். இவர் சில வருடங்களுக்கு முன்னர் தனது கணவன் மற்றும் இளைய மகன் சுதான் ஆகியோருடன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். ஆனால் இவரின் மூத்த மகன் சுபாஷ் கிறிஸ்தவ மதத்திற்கு மாறவில்லை. அவர் இந்து மதத்தையே பின்பற்றியுள்ளார்.

இந்நிலையில் ஃபுலாய் தபாடே சில நாட்களுக்கு முன்னர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த பிறகு அவரது உடலை கிறிஸ்தவ முறைப்படி புதைப்பதா? அல்லது இந்து முறைப்படி எரிப்பதா என அவரது மகன்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரையும் சமாதானம் செய்ய ஊர் மக்கள் முயன்றும் முடியவில்லை. இருவரும் தங்கள் முடிவில் இருந்து பின்வாங்காமல் இருந்துள்ளனர்.

இதனை அடுத்து இந்த விவகாரம் அந்த பகுதி காவல் நிலையத்திற்கு சென்றதை அடுத்து காவல் துறையினர் மற்றும் ஊர்மக்கள் முடிவு செய்து உடலை கிறிஸ்தவ முறைப்படி புதைப்பது என முடிவு செய்தனர். அதன்படி இறந்தவரின் உடலும் புதைக்கப்பட்டது.

ஆனால் இந்த முடிவில் திருப்தி இல்லாத சுபாஷ் தனது தாயாரின் உடலை போன்று ஒரு பொம்மையை பைரில் செய்து அதற்கு நெருப்பு வைத்து இறந்து போன தனது தாயின் அடையாள தகனத்தை நடத்தியுள்ளார்.


Advertisement