மது போதையில் மகன் செய்த செயல்! மர்மமாக இறந்து கிடந்த தாய்! அதிர்ச்சி பின்னணி!son killed his mom

புதுச்சேரி பாகூரை சேர்ந்த ராணி என்பவர் கணவரை பிரிந்து தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்ற ராணி அங்கிருந்து தான் சம்பாதித்த பணத்தை மகன் அய்யனாருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதைவைத்து அவரும் புதிதாக வீடு கட்டி, தொழில் தொடங்கியுள்ளார். இதனையடுத்து கடந்த ஆண்டு சொந்த ஊருக்கு திரும்பிய ராணி தன்னிடம் இருந்த மீதிப் பணத்தை தனது மகளுக்கு கொடுக்க நினைத்துள்ளார். ஆனால் அதற்கு அய்யனார் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த மாதம் அய்யனார் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, புதிதாக கட்டிய வீட்டில் தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அய்யனாரின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மதுபோதையில் இருந்த அய்யனார் தனது தாயிடம் தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார்.

son killed mom

இந்தநிலையில் கடந்த 13-ஆம் தேதி ராணி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராணியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ராணியின் கழுத்து நெரிக்கப்பட்டதும், தலையில் அடித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. மேலும், மகன் அய்யனார் தான் ராணியை கொலை செய்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அய்யனாரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.