பெற்ற தாயை ஓங்கி அடித்த மகன்.! ஒரே அடியில் உயிரைவிட்ட தாய்.! பதறவைக்கும் வீடியோ.!

பெற்ற தாயை ஓங்கி அடித்த மகன்.! ஒரே அடியில் உயிரைவிட்ட தாய்.! பதறவைக்கும் வீடியோ.!


son-kille-mom

"தாயில்லாமல் நானில்லை.. தானே எவரும் பிறந்ததில்லை", "நூறு சாமிகள் இருந்தாலும் அம்மாவை போல ஆகிடுமா" என பெற்ற தாயை புகழும் மனிதர்கள் இருக்கும் இவ்வுலகில், பெற்ற தாயை அனாதையாக விடும் கொடூரர்களும், அடித்து சித்திரவதை செய்யும் காட்டுமிராண்டிகளும் இம்மண்ணில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில், டெல்லியில் சாலை ஓரமாக 76 வயது மதிக்கத்தக்க தாயிடம் மகன் தன் மனைவியுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தாயுடன் வாக்குவாதம் முற்றியதால், கோபமடைந்த அந்த நபர் தன்னுடைய கையால் பலமாக அவரை தாக்குகிறார். அவர் அடித்த ஒரே அடியில் சுருண்டு விழுந்துள்ளார் அவரது தாய்.

தனது மாமியார் கீழே சுருண்டு விழுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த மருமகள், அவரை எழுப்ப முயற்சிக்கிறார். ஆனால் அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.