இந்தியா

மகன் வாங்கி வைத்திருந்த மதுவை திருடி குடித்த தந்தை! கோவத்தில் மகன் செய்த கொடுரச் செயல்!

Summary:

son beated his father for drink

கேரளா மாவேலிக்கரையை சேர்ந்தவர் ரெவிஸ். 29 வயது நிறைந்த இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். அவரை போலவே அவரது தந்தையும் மாபெரும் மதுபிரியராக இருந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெவிஸ் மது பாட்டில் வாங்கி வந்து அவரது வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.

இதனை கண்ட ரெவிஸ் தந்தை, அவர் வெளியேச் சென்றதும்,மது பாட்டிலை எடுத்து யாருக்கும் தெரியாமல் குடித்துவிட்டார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பிவந்த மகன் ரெவிஸ் குடித்துவிட்டு கிடந்த காலி மதுபாட்டிலை கண்டதும் பெரும் அதிர்ச்சி அடைந்து ஆத்திரம் அடைந்துள்ளான்.

இதனையடுத்து மதுவை குடித்தது தனது தந்தை என தெரிந்ததும், ரெவிஸ் கடுப்பாகி வீட்டிற்கு வெளியே நின்ற தந்தையை சரமாரியாக அடித்து, உதைத்துள்ளார். இந்நிலையில் அவரை அக்கம்பக்கத்தினர் தடுத்து தந்தையை காப்பாற்றியுள்ளனர். மேலும்  சிலர் அந்த சண்டையை வீடியோ எடுத்து அதனை தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளனர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெயிரலான நிலையில் இதனை கண்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


Advertisement