ஆத்தாடி.. எப்படி வளஞ்சு நெளிஞ்சு ஏறுது.! மாடி ஏறும் ராட்சச மலைப்பாம்பு! நடுநடுங்கவைக்கும் வீடியோ!!

ஆத்தாடி.. எப்படி வளஞ்சு நெளிஞ்சு ஏறுது.! மாடி ஏறும் ராட்சச மலைப்பாம்பு! நடுநடுங்கவைக்கும் வீடியோ!!



Snake went up to upstairs video viral

அண்மைகாலமாக சமூகவலைதளங்களில் பறவைகள், விலங்குகள் பெரும்பாலும் பாம்புகள் போன்ற உயிரினங்கள் குறித்த வீடியோக்கள் பெருமளவில் பரவி வருகிறது. அவற்றில் சில வீடியோக்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். சில அதிர்ந்து நடுநடுங்க வைக்கும். மேலும் சில வீடியோக்கள் வேடிக்கையாக வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

பாம்புகள் என்றாலே படையும் அஞ்சும் என்பர். எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் பாம்பு என்றால் சிறிது நடுக்கம் கொள்ளதான் செய்வர். இந்த நிலையில் தற்போது பாம்பு ஒன்று வேகவேகமாக வளைந்து நெளிந்து மாடிப்படியில் ஏறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறித்த வீடியோவில் கருப்பு நிற ராட்சத மலைப்பாம்பு ஒன்று மாடிப் படிக்கட்டுகளின் கைபிடியில் தனது உடலை வளைத்து நெளித்து லாவகமாக ஏறி சென்றுள்ளது. இந்த வீடியோவை இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பார்ப்போரையும் நடுநடுங்க வைத்துள்ளது.