புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கடித்த பாம்பை துணிச்சலாக திரும்பி கடித்த நபர்; இறுதியில் நடந்தது என்ன தெரியுமா?
குஜராத் மகிசாகர் மாவட்டம் அஜன்வா கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வத் காலா பாரியா (60). விவசாயியான இவர் சோளக்கதிர் கட்டுகளை லாரியில் அடைந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுக்குள் இருந்த பாம்பு அவரது கை மற்றும் முகங்களில் கடுமையாக கடித்துள்ளது.
இதனால் கோபமடைந்த அவர் பதிலுக்கு தைரியமாக பாம்பை பிடித்து கடித்துக் கொன்று விட்டார். கடித்த பாம்பு மிகவும் கொடிய விஷமுள்ள பாம்பு என்பதால் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.
உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளித்து உள்ளார்கள். ஆனால் நேரம் செல்லச் செல்ல விஷம் தலைக்கேறி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாம்பு கடித்தவுடன் உடனே கொண்டுவந்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம்.மேலும் கொடிய விஷமுள்ள பாம்பை திரும்பி கடித்ததால் விஷத்தின் வீரியம் அதிகமாகி அவரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.