இந்தியா

அந்த குழந்தையின் மனசுதான் சார் கடவுள்!! புறாவின் தாகம் தீர சிறுவன் எடுக்கும் முயற்சி..!! வைரல் வீடியோ..

Summary:

புறாவின் தாக்கம் தீர்க்க சிறுவன் ஒருவன் செய்த காரியம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

புறாவின் தாக்கம் தீர்க்க சிறுவன் ஒருவன் செய்த காரியம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுசாந்தா நந்தா அவர்கள் வெளியிட்டுள்ள 30 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றில், புறா ஒன்று வீட்டிற்கு வெளியே அமர்ந்துள்ளது. இந்நிலையில் அந்த புறாவை பார்த்த சிறுவன் ஒருவன், அந்த புறாவிற்கு தண்ணீர் கொடுக்க முயற்சிக்கிறான்.

அந்த புறாவுக்கும், சிறுவனுக்கும் இடையே பெரிய கிரில் கேட் இருப்பதால், தண்ணீரை ஒரு கரண்டியில் ஊற்றி, அதனை புராவிடம் நீட்டுகிறான் அந்த சிறுவன். முதலில் சற்று பயப்படும் அந்த புறா, பின்னர் சிறுவன் நீட்டும் கரண்டியில் இருக்கும் தண்ணீரை பருகுகிறது.

இந்த வீடியோவை பதிவிட்டுல சுசாந்தா நந்தா அவர்கள், கருணையும், நம்பிக்கையும் கூட பிறந்தவர்கள் போன்று என குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த சிறுவனை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement