கேரளாவிற்காக வீடு வீடாக உண்டியல் ஏந்திய தமிழக சிறுவன்! கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா?

கேரளாவிற்காக வீடு வீடாக உண்டியல் ஏந்திய தமிழக சிறுவன்! கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா?



Small boy collected money for kerala flood relief

கேரளா மாநிலத்தில் கடந்த நூறு வருடங்களுக்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மக்கள் அனைவரும் தங்க இடம் இல்லாமல் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார். உன்ன உணவில்லாமல், தங்களது உடைமைகளை இழந்து உறவுகளை இழந்து தவித்துவருகின்றனர்.

உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து கேரளா மக்களுக்கு உதவிகள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் கேரளா மக்களுக்கு உதவுவதற்காக தமிழகத்தை சேர்ந்த சிறுவன் வீடு வீடாக உண்டியல் ஏந்தி பணம் சேர்த்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kerala flood
கரூர் மாவட்டத்தை சேர்ந்த கார் மெக்கானிக் ஒருவரின் மகன் நசீர் உசேன். 7 ஆம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவன் கேரளா மக்களுக்காக உண்டியல் ஏந்தி பணம் சேர்த்துள்ளார். இதை பற்றி அவர் கூறுகையில் தொலைக்காட்சியில் கேரளா மக்கள் படும் கஷ்டத்தை பார்த்து அவர்களுக்கு உதவி செய்வதற்காக தன தந்தையிடம் பணம் கேட்டதாகவும்  ஆனால் வீட்டின் ஏழ்மை காரணமாக அப்பாவால் நிதி தரமுடியவில்லை.

ஆனாலும் எப்படியாவது கேரளா மக்களுக்கு உதவவேண்டும் என்று எண்ணிய நசீர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள அனைவரிடமும் உண்டியல் வைத்து பணம் வசூலிக்க முடிவு செய்துள்ளார்.

அப்பகுதி மக்களும் சிறுவனின் இந்த செயலைக் கண்டு, தங்களால் இயன்ற நிதியை உண்டியலில் போட்டுள்ளனர். இதன் பயனாக 2,169 ரூபாய் கிடைத்துள்ளது.

kerala flood

அந்தத் தொகையை சிறுவன் கேரளாவுக்கான நிவாரண நிதியாக கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷிடம் மாணவர் வழங்கியுள்ளார்.

மாணவனின் இறக்க குணத்தை பாராட்டிய அதிகாரி இதை என்றும் விட்டுவிடாதே என்றும் மேலும் நீ வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேற வேண்டும் என்றும் வாழ்த்தி அனுப்பியுள்ளார்.