ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.... தொழிலதிபரை கொன்ற வழக்கில் நடுவிரலை காட்டியது ஆபாச சைகை இல்லையாம்! சியாவின் தந்தை சொன்ன அந்த ஒரு காரணம்..!!!
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சியா கோயல், பத்திரிகையாளர்களை நோக்கி நடுவிரலைக் காட்டியதாக பரவிய வீடியோ சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அந்த காட்சிக்கு அவரது தந்தை பிரவீன் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
வைரலான வீடியோ குறித்து தந்தையின் விளக்கம்
சியா கோயல் ஊடகத்தினரை அவமதிக்கும் நோக்கில் எந்தச் செயலும் செய்யவில்லை என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார். தகவலின்படி, போலீஸ் வாகனத்தில் ஏறியபோது கார் கதவு எதிர்பாராதவிதமாக அவரது கையில் மோதியதால் நடுவிரலில் காயம் ஏற்பட்டதாகவும், அதனால் வலியின் காரணமாக விரலை அந்த நிலையில் வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கேதன் அகர்வால் கொலை வழக்கில் விசாரணை தீவிரம்
இந்த வழக்கில் சியா கோயலும், அவரது காதலர் எனக் கூறப்படும் சேத்தன் சவுத்ரியும் முக்கிய குற்றவாளிகளாக போலீசார் கருதுகின்றனர். வரும் நவம்பர் மாதம் சியாவுக்கும் கேதன் அகர்வாலுக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில், கடந்த ஜூன் 18 அன்று புனேயில் உள்ள லோஹாகர் கோட்டையின் செங்குத்தான பகுதியில் இருந்து கேதனை கீழே தள்ளி கொலை செய்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போலீஸ்கு பயந்து புடவை குவியலுக்கு ஒளிந்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்! அடுத்த நொடி போலீஸ் செய்த அதிரடி செயல்... பகீர் கைது வீடியோ..!!!
புனே போலீஸ் விசாரணையில் புதிய தகவல்கள்
உண்மை கண்டறியும் சோதனைக்கு இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் மொபைல் போன்களில் இருந்து அழிக்கப்பட்ட குறியீட்டு வார்த்தைகள், எமோஜிகள் மற்றும் உரையாடல்களை மீட்டுள்ள புனே போலீசார், வழக்கின் பின்னணியை கண்டறிய தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Pune, Maharashtra: Siya Goyal, accused in the Ketan Agarwal murder case, was taken by Pune Rural Police to her Market Yard residence for investigation. After the investigation was completed, while leaving the house, Siya Goyal allegedly made obscene gestures and showed the middle… pic.twitter.com/mHnQKlfRrq
— IANS (@ians_india) July 2, 2026
இதையும் படிங்க: பப்பில் பீர் பாட்டிலுடன் ஆவேசமாக பேசிய சியா கோயல்! அவர் சொன்ன 'அந்த 'ஒரு வார்த்தை... கொலையின் பின்னணி இதுதானா?. வைரலாகும் வீடியோ.!!!