திருமணத்தின் போது மரணமடைந்த அக்கா.. வீட்டில் பிணம்.. கோவிலில் திருமணம்.. தங்கையை திருமணம் முடித்து வைத்த பெற்றோர்..!sister-who-died-during-marriage-corpse-at-home-married

குஜராத்தில் வசித்து வருபவர் ரத்தோர். இவருக்கு ஹுத்தல் என்ற மகள் உள்ளார். இவருக்கும் ராணாபாய் என்பவரின் மகன் விஷால் என்பவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டிருந்தது. இதன்படி இவர்களது திருமணம் பகவனேஸ்வரர் மகாதேவ் கோயில் நடத்த முடிவு செய்யப்பட்டு மணமக்களுக்கு சடங்குகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது மணமகளான ஹுத்தல் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து ஹுத்தலை உறவினர்கள் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹீத்தலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் செய்வதென அறியாமல் சோகத்தில் ஆழ்ந்தனர்.

During marriage

இந்நிலையில் உறவினர்களின் ஆலோசனைப்படி ஹுத்தல் இறந்து விட்டதால் அவரது சடலத்தை ஐஸ்பெட்டியில் வைத்துவிட்டு அவரது தங்கையை மணமகளாக்கி பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். மேலும் இறந்து போன மகளை வீட்டில் வைத்துவிட்டு பெற்றோர் தங்கைக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.