உயிர் பிரியும் முன் நடந்தது என்ன? பாடகர் கேகேயின் கடைசி நிமிடங்கள்.! பதறவைக்கும் ஷாக் வீடியோ.!

உயிர் பிரியும் முன் நடந்தது என்ன? பாடகர் கேகேயின் கடைசி நிமிடங்கள்.! பதறவைக்கும் ஷாக் வீடியோ.!


Singer KK last minute video viral

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளிலும் ரசிகர்களை கவரும் வகையில் ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களைப் பாடி பிரபலமானவர் பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத். கேகே என அழைக்கப்படும் இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.

53 வயது நிறைந்த அவர் நேற்று இரவு கொல்கத்தாவில் உள்ள நஸ்ருல் மஞ்சாவில் கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கச்சேரியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக பாடி கொண்டிருந்துள்ளார். அப்பொழுது திடீரென அசௌகரியமாக உணர்ந்த கேகே உடனே தன்னிடமிருந்த மைக்கை அருகில் உள்ளவரிடம் கொடுத்துவிட்டு மேடை பின்புறமாக வெளியே அழைத்து செல்லப்படுகிறார்.

பின் ஹோட்டலுக்கு சென்ற அவர் மாடிப்படிகளில் மயங்கி விழவே உடனே அவரை கொல்கத்தா CMRI மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கேகே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மேடையில் கேகேவின் கடைசி நிமிட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது