அதிர்ச்சி சம்பவம்.. மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்..தற்கொலை என நாடகமாடி சிக்கிய சம்பவம்..!

அதிர்ச்சி சம்பவம்.. மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்..தற்கொலை என நாடகமாடி சிக்கிய சம்பவம்..!shocking-incident-the-husband-who-strangled-his-wife-th

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் குட்டேனஹள்ளி பகுதியில் வசித்து வருபவர்கள் ஆதி- ஸ்ரீ தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் கடந்த சில நாட்களாகவே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆதி அவரது மனைவி ஸ்ரீயை அடித்து கொடுமை செய்து துன்புறுத்தி உள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன் மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆதி மனைவி ஸ்ரீயின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஸ்ரீ உயிரிழந்த நிலையில் பதறிப்போன ஆதி கொலையை மறைப்பதற்காக ஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் நாடகமாடியுள்ளார்.

karnataka

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்ரீயின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் ஸ்ரீயின்‌ இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீஸில் புகார் ஒன்றை அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்ரீயின் கணவரான ஆதியை விசாரணை நடத்தினர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி ஸ்ரீயின் கழுத்தை ஆதி நெறித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து ஆதியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.