மது போதையில் வம்பு செய்த மகன்... தந்தை கொடுத்த கொடூர தண்டனை.!
கர்நாடக மாநிலத்தில் குடிகார மகனை தந்தையே அடித்து கொலை செய்து எரித்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்த தந்தையை காவல்துறை கைது செய்துள்ளது.
கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவின் ரூரல் ஏரியாவில் அமைந்துள்ள வானிகரஹள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமையா(58). இவரது மகன் ஆதர்ஷ் வயது 38. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி பெற்றோரிடம் தகராறு செய்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிக்க பணம் தரவில்லை என்று கூறி தனது தாயை தாக்கியுள்ளார் ஆதர்ஷ். இதனால் அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்திருக்கிறார் ஜெயராமையா. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த ஆதர்ஷ் வழக்கம் போல் தகராறு செய்து இருக்கிறார். அப்போது ஆத்திரத்தில் இருந்து அவரது தந்தை மகனின் கை கால்களை கட்டி போட்டு அவரை அடித்து கொலை செய்துவிட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் இறந்த ஆதர்ஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த அவரது தந்தை ஜெயராமையாவை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.