ஜார்கண்டில் பாதுகாப்பு படையினர் அதிரடி... மாவேயிஸ்டுகளுடன் துப்பாக்கி சூடு...!



Security forces in action in Jharkhand... firing with Maoists...

ஜார்கண்டில் காட்டுப்பகுதியில் பதங்கி இருந்த மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

நேற்று முன்தினம் இரவு, ஜார்கண்டின் மேற்கு சிங்பும் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜிகலடா, கொனிசா, ஹவாங்டி கிராமங்களுக்கு அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. 

மாநில காவல்துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் இணைந்த படையினர் காட்டுப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் அங்கே பதுங்கி இருந்த மாவேயிஸ்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், இரு தரப்பினருக்கும் இடையே சுமார் 15 நிமிடங்களுக்கு துப்பாக்கிச்சூடு சண்டை நடந்தது. 

அதன் பின்னர் மாவோயிஸ்டுகள் அங்கிருந்து தப்பி ஓடினர். பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்த இடத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கிடைத்தன. 

இந்த துப்பாக்கி சண்டையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாநிலத்தில் 24 மணி நேர முழு அடைப்புக்கு மாவேயிஸ்டுகளின் மற்றோரு பிரிவினர் அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை சிறிது பாதிக்கப்பட்டது.