இந்தியா சமூகம்

பத்ம பூஷன் விருதை திரும்ப கொடுக்க உள்ளேன்; அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு.!

Summary:

scosialist anna hasare - bathmaboosan - retern


தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை திரும்ப தருவதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரேவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அன்னா ஹஸாரே ஓர் இந்திய சமூக சேவகர் கிராமப்புற மேம்பாட்டிற்காகவும், வெளிப்படையான அரசாங்க செயல்பாடுகளை அதிகரிக்கவும், விசாரணை மற்றும் உத்தியோக ஊழல்களை தண்டிக்கவும் இயக்கங்கள் அமைத்த இந்திய சமூக ஆர்வலர்.

Image result for anna hazare

ஹசாரே மகாராஷ்டிரா மாநிலம் அஹமது நகர் மாவட்டம் பர்நேர் தாலுகாவில் ரலேகன் சித்தியில் உள்ள ஒரு கிராமத்தில் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பிற்கு பணியாற்றினார். மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாக இந்த கிராமத்தை ஏற்படுத்துவதில் அவரின் பங்களிப்பிற்காக அவருக்கு நாட்டின் மூன்றாம் மிக உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் 1992 ல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தனது சொந்த கிராமத்தில் இன்றுடன் ஐந்தாவது நாளாக லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றக் கோரி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர் தற்போதுள்ள அரசியல் சூழலில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பத்ம பூஷன் விருது தகுதியானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.


Advertisement