இந்தியா

கேரளாவில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது!

Summary:

school teacher arrested for sexual abuse

கேரளா மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்தவர் 50 வயது நிரம்பிய ஆசிரியர் அஷ்ரப். இவர் அதே பள்ளியில் பயிலும் 2 மாணவர்களிடம் தவறான முறையில் நடக்க முயன்றுள்ளார். அவர்களிடம் பல பாலியல் சில்மிஷங்களைச் செய்துள்ளார்.

இதனால் மிக மனவேதனை அடைந்த அந்த பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளனர் அதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் அந்த பள்ளி ஆசிரியர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் அதிர்ச்சியளிக்கும் செய்தி என்னவெனில் இதே ஆசிரியர் கடந்த 2011ஆம் ஆண்டு வேறு ஒரு அரசுப் பள்ளியில் பணியாற்றிய போது இதே போன்ற பாலியல் குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் எடக்கு முடக்காக பதிலளித்ததால் ஆசிரியருக்கு பெயில் வழங்கப்பட்டது. அதன்பின் பணிமாறுதல் பெற்ற அவர் தற்பொழுது மலப்புறத்தில் உள்ள பள்ளியில் பணியாற்றி வருகிறார். அந்த சமயத்தில் போக்ஸோ சட்டம் அமலில் இல்லாததால் ஆசிரியர் எளிதாக தப்பிவிட்டார்.

ஆனால் இந்த முறை அவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நிச்சயம் இவர் இந்த முறை தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என மாணவர்களின் பெற்றோர்கள் எண்ணுகின்றனர். மேலும் இதுபோன்று குற்றப் பின்னணி உள்ள ஆசிரியர்களை மீண்டும் பள்ளிகளில் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது எனவும் பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.


Advertisement