நடிகர்களை விட அதிக அளவு நிவாரண நிதி அளித்த பள்ளி மாணவி!. குவியும் பாராட்டு!.

நடிகர்களை விட அதிக அளவு நிவாரண நிதி அளித்த பள்ளி மாணவி!. குவியும் பாராட்டு!.


school girl give a flood relief fund to kerala


கேரளாவில்,மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கேரளா முழுவதும் முடங்கிப்போயுள்ளது. அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நிலச்சரிவு ஏற்பட்டு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 357-ஆக உயர்ந்துள்ளது. 

கேரளா மக்கள் அங்கு ஏற்பட்ட வெள்ளத்தால்  தங்கள் வீடு, உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் நிவாரண உதவிகளை செய்துவருகின்றனர்.

இதனையடுத்து கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக பள்ளி மாணவி ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கியுள்ளது பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

kerala flood

கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கரன் என்பவரின் மகள் ஸ்வாகா எனும் 16 வயது நிரம்பிய சிறுமி தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கேரளாவில் பெய்த கனமழையால்  வெள்ளத்தால் பலகோடி இழப்பு ஏற்பட்டத்தையொட்டி அரசு பெரும் தொகை எதிர்பார்த்துள்ளது. கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு பல்வேறு இடங்களில் இருந்து நிதி அளிக்கப்பட்டு வருகிறது.

இத்தகவல் ஸ்வகாவுக்கு தெரியவந்தது. தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். தனது தந்தை தனக்கு எழுதி வைத்த 1 ஏக்கர் நிலத்தை நிவாரணமாக வழங்க முடிவு செய்து முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினார்.