கதவை தட்டி நான் கர்ப்பமா இருக்கேன்! உதவிய மூதாட்டிக்கு இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! திடுக்கிடும் அதிர்ச்சி வீடியோ...



elderly-attacked-by-fake-pregnant-woman-argentina

அர்ஜென்டினாவில் மூதாட்டி மீது தாக்குதல்

அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள மான்டே கிராண்டே என்ற பகுதியில் நடந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கர்ப்பிணி என கூறி வீட்டிற்குள் நுழைந்த பெண்மணி

செவ்வாய்க்கிழமை பிற்பகலில், ஒரு பெண் "நான் கர்ப்பமாக இருக்கிறேன்" என கூறி, ஒரு மூதாட்டியின் வீட்டைத் தட்டினாள். மனிதாபிமானம் கொண்ட அந்த மூதாட்டி, அவள் கூறியதைக் நம்பி வீட்டிற்குள் அழைத்தார்.

மூத்தாட்டியை தாக்கி, திருட முயன்ற தம்பதிகள்

வீட்டிற்குள் நுழைந்ததும், அந்த பெண் மூதாட்டியை தாக்கி, கழுத்தை இறுக்கி, லாக்கர் சாவியை பறித்துக்கொண்டார். பின்னர் வந்த ஒரு ஆணும் சேர்ந்து மூதாட்டியை பலமாக தாக்கினர். இருவரும் வீட்டில் இருந்த பொருட்களை திருட முயற்சி செய்தனர்.

இதையும் படிங்க: பாம்பு படையையே நடுங்க வைக்கும் செடிகள்! உங்க வீட்டில் இந்த செடிகள் இருக்கா?

நாய் குரைத்ததும் தாக்கியவர்கள் தப்பினர்

அந்த நேரத்தில் மூதாட்டி கத்தி உதவி கேட்டதுடன், அவர் வளர்த்த நாய் தொடர்ந்து குரைத்ததால், குற்றவாளிகள் பயந்துபோய் தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மூதாட்டிக்கு ஏற்பட்ட உடல் மற்றும் மன பாதிப்பு

தாக்குதலால் மூதாட்டியின் முகத்தில் காயம் ஏற்பட்டதுடன், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நரம்பியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த மூதாட்டி, மேலும் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்.

போலீசில் புகார், சிசிடிவி காட்சிகள் வைரல்

இச்சம்பவம் தொடர்பாக மூதாட்டியின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தாக்கியவர்களைப் பற்றிய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. போலீசார் விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 30 அடி உயரத்தில் ஜாலியாக ஜிப் லைன் சென்ற சிறுமி! தீடீரென கயிறு அறுந்து கீழே விழுந்த சிறுமி! திக் திக் வீடியோ காட்சி!