இளைஞருக்கு நடந்த சிறுநீரக கல் அறுவை சிகிச்சை... நல்லா இருந்த கிட்னியில் அவசர தையல்! ஆப்ரேஷன் தியேட்டரில் மருத்துவர்கள் செய்த அதிர்ச்சி! பரிதாபமாக பறிப்போன இளைஞரின் உயிர்!!!



satna-kidney-surgery-negligence-death-protest

மத்திய பிரதேசத்தின் சத்னாவில், சிறுநீரக கல் அறுவை சிகிச்சைக்காக சென்ற இளைஞர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் தவறால் நிலைமை மோசமடைந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.

அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு

பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த ரவி ரஜக், சிறுநீரக கல் பிரச்சினையால் சத்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் 4-ஆம் தேதி அவருக்கு சுமார் 5 மணி நேரம் சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தகவலின்படி, கல் இருந்த சிறுநீரகத்திற்குப் பதிலாக, ஆரோக்கியமான மற்றொரு சிறுநீரகத்தில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஐசியூ வில் மயக்க நிலையில் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! சிசிடிவி காட்சிகளை மறைத்த மருத்துவமனை நிர்வாகம்! பகீர் சம்பவம்..!!!

நிலைமை மோசம்; மற்றொரு சிறுநீரகமும் அகற்றம்

இதனால் ரவியின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை ரேவாவில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு நடந்த பரிசோதனையில், ஆரோக்கியமான சிறுநீரகத்தில் ஆழமான காயம் இருப்பதும், அவசரமாக தையல் போடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. ரத்தக் கசிவு மற்றும் தொற்று அதிகரித்ததால், அந்தச் சிறுநீரகத்தையும் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ரவி உயிரிழந்தார்.

போராட்டம், இழப்பீடு மற்றும் விசாரணை

இளைஞரின் உயிரிழப்பால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர், மருத்துவர்களின் medical negligence காரணமாகவே இது நடந்ததாக குற்றம்சாட்டினர். ரூ.20 கோடி இழப்பீடு கோரி சடலத்துடன் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மருத்துவமனை முன்பும் போராட்டம் நீடித்தது. போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினர்; சில இடங்களில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

சுமார் 4 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின், குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் காசோலை மற்றும் ரூ.50,000 ரொக்கம் வழங்க சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் மனோஜ் சுக்லா, இந்த விவகாரத்தில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும், குற்றம் உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: அதிகாலை நடைபயிற்சியே ஆபத்தாக மாறியது! வாக்கிங் சென்ற தம்பதிக்கு நேர்ந்த கதி.... உடல் சிதறி பரிதாமான மரணம்! போராட்டத்தில் மக்கள் கூட்டம்!!!