திடீரென ட்ரெண்டிங் ஆன சேலை கலாச்சாரம்! வண்ண வண்ண புடவைகளில் மின்னும் பெண்கள்

திடீரென ட்ரெண்டிங் ஆன சேலை கலாச்சாரம்! வண்ண வண்ண புடவைகளில் மின்னும் பெண்கள்


Sareetwitter has tag in twitter

இந்தியாவின் பாரம்பரிய கலாச்சார உடைகளில் முதன்மையானது சேலை. பெண்கள் விரும்பி அணியக்கூடிய இந்த சேலைகள் விதவிதமான அலங்காரங்களுடன் தயாரிக்கப்படுகிறது.

வண்ண வண்ண டிசைன்களில் தயாரிக்கப்படும் இந்த சேலைகளை பெண்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றார்போல் வாங்கி அணிகின்றனர். இந்த சேலைகள் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றாற்போல் அணியுமாறு தயாரிக்கப்படுகிறது. விழாக்காலங்களில் அணியும் சேலைகளில் சரிகைகள் அதிகமாக வைத்து பளபளவென மின்னும்.

saree

அதைப்போல் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் அதற்கு ஏற்றார்போல் சேலைகளை அணிகின்றனர். பட்டு, காட்டன், சிந்தடிக் என பலதரப்பட்ட சேலை வகைகள் உள்ளன.

saree

இந்தியாவின் இந்தப் பாரம்பரிய உடையை இந்த நாகரீக காலத்தில் பெண்கள் அதிகமாக சேலை அணிவதை தவிர்த்து வருகின்றனர். ஏதாவது விழாக்காலங்களில் மட்டும் தான் பெண்களை சேலையுடன் பார்க்க முடிகிறது. இந்நிலையில் ட்விட்டரில் #sareetwitter என்ற ஹேஷ் டாக் மூலம் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.