சானியா மிர்சாவின் தங்கைக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா விளையாட்டு

சானியா மிர்சாவின் தங்கைக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா!

பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. ஐதராபாத்தை சேர்ந்த இவர் ஏராளமான வெற்றிகளை குவித்து இந்தியாவிற்கு ஏராளமான பெருமையை சேர்த்துள்ளார்.அதனை தொடர்ந்து சானியா  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

அதனை தொடர்ந்து சானியா பாகிஸ்தான் நாட்டிற்காக டென்னிஸ் விளையாட வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையிலும், அதனை நிராகரித்துவிட்டு இந்தியாவிற்காக மட்டும்தான் எப்பொழுது விளையாடுவேன் என இந்தியா சார்பாக பல போட்டிகளில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது சானியா மிர்சா தனது தங்கைக்கு திருமணம் என கூறியுள்ளார். மேலும் தனது தங்கையை திருமணம் செய்து கொள்ள போகிறவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முகமது அசாருதீன் மகனான ஆசாத் என்பவரை வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்யவுள்ளதாக கூறியுள்ளார். 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo