நல்ல குடும்பத்தை சேர்ந்தவங்க யாரும் சபரிமலைக்கு வரமாட்டாங்க., சர்ச்சையை கிளப்பிய பிரபல பாடகர், கிளம்பும் எதிர்ப்புகள்.!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது உட்பட அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
ஆனால் இந்த உத்தரவுக்கு கேரளா மாநிலத்தில் கடும் எதிா்ப்பு தொிவிக்கப்பட்டது. மேலும் கேரளாவில் பா.ஜ.க. உள்ளிட்ட அணைத்து இந்து அமைப்புகள் நீதிமன்ற உத்தரவுக்கு எதிா்ப்பு தொிவித்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஐப்பசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில் கோவிலுக்குள் செல்ல பல பெண்கள் முயன்றனர்.அவர்களை போராட்டக்காரா்கள் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. மேலும் வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும். இதையொட்டி போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பெண்கள் பலர் கோயிலுக்கு செல்ல முயற்சிக்கும் நிலையில் நல்ல குடும்பத்தை பின்னணியாக கொண்ட பெண்கள் யாரும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வர விரும்ப மாட்டார்கள் என பிரபல பக்தி பாடகர் வீரமணி ராஜூ கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. மேலும் இதற்கு மகளிர் சார்பில் பெரும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.