கடற்கரையில் உயிருடன் இருக்கும் முதலமைச்சருக்கு சடங்கு நடத்திய நபர்.! பதறி ஓடிய போலீசார்.!
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் படத்துக்கு கங்கை நதியில் அமர்ந்து இறந்தவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சடங்கு நடத்தியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியாவில் இருக்கும் கங்கை நதிக்கரையில், ஒரு நபர் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படத்தை வைத்து, இறந்தவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சடங்குகளை செய்து வந்துள்ளார்.

இது குறித்த தகவல் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து பதறிப்போய் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தல்சப்ரா கிராமத்தை சேர்ந்த பிரிஜேஷ் யாதவ் என்பவரை கைது செய்தனர். அவர் நதிக் கரையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் படத்தை வைத்து பிண்ட தானம் வழங்கியதாகவும் அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் பிரிஜேஷ் யாதவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.