இனி அந்த இடங்களில் ‘செல்பி’ எடுக்க தடை!! மத்திய அரசின் அதிரடி!!

இனி அந்த இடங்களில் ‘செல்பி’ எடுக்க தடை!! மத்திய அரசின் அதிரடி!!



restrict for selfie


சுற்றுலா தலங்களில் ‘செல்பி’ எடுப்பதால் ஏற்படும் விபத்துகளை தடுக்க, சுற்றுலா தலங்களில் உள்ள ஆபத்தான இடங்களை கண்டறிந்து, பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளிடம், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சுற்றுலா பயணியர், ஆபத்தான இடங்களில், 'செல்பி' எடுக்கும்போது, தவறி விழுந்து பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சுற்றுலா தலங்களில் ஆபத்தான பகுதி என தெரிந்தே செல்போனில் ‘செல்பி’ புகைப்படம் எடுக்கின்றனர். சுற்றுலா தலங்களில் அவ்வாறு புகைப்படம் எடுக்கும்போது ஏற்படும் மரணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

selfie

இதுபோன்ற அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில், சுற்றுலா பயணியரின் பாதுகாப்புக்காக மத்திய அரசு, மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுற்றுலா தலங்களில் ஆபத்தான பகுதிகளாக கண்டறிந்து அப்பகுதிகளுக்கு, சுற்றுலா பயணியர் செல்வதையும், 'செல்பி' எடுப்பதையும் தடை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அகிர், லோக்சபாவில் கூறியுள்ளார்.