உயிரை பறிக்கும் கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட இதுவும் ஒரு காரணம்!! மருத்துவர் கூறும் ஷாக் தகவல்!!Reason for karupu poonjai in tamil

கருப்பு பூஞ்சை தொற்று அதிகரிக்க ஸ்டீராய்டுகளின் தவறான பயன்பாடு ஒரு காரணம் என டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவின் கோரம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்துவருகிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில் கருப்பு பூஞ்சை தொற்று என்ற நோய் மக்களை மேலும் அச்சமடைய வைத்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், கட்டுப்பாடு இல்லாத அளவுக்கு இரத்த சர்க்கரை நோய் உள்ளவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை இந்த கருப்பு பூஞ்சை தொற்று தாக்குகிறது.

அதுமட்டும் இல்லாமல் ஸ்டீராய்டுகளின் தவறான பயன்பாடு காரணமாகவும் இந்த  'கருப்பு பூஞ்சை' தொற்று அதிகரிப்பதாகவும், ஸ்டெராய்டுகளை தவறாக எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

இதனால் ஸ்டீராய்டுகளை தவறாக பயன்படுத்துவதை உடனே கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.