வைரல் போஸ்ட்: மஞ்சள் நிறத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆமை! விசாரணையில் தெரியவந்த உண்மை

வைரல் போஸ்ட்: மஞ்சள் நிறத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆமை! விசாரணையில் தெரியவந்த உண்மை


rare-yellow-turtle-rescued-from-pond-in-west-bengal

மஞ்சள் நிறத்திலானஆமை ஒன்று மேற்கு வங்க மாநிலத்தின் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த ஆமையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.

பொதுவாக ஆமைகள் மஞ்சள் நிறத்தில் இருப்பது இல்லை. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தின் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள குளம் ஒன்றில் மிகவும் அறியவகையில் ஆமை ஒன்று மஞ்சள் நிறத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆமை மஞ்சள் நிறத்தில் இருந்ததால் உடனே இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவ தொடங்கியது.

Viral News

உடனே இந்த மஞ்சள் நிற ஆமை குறித்தும், அது ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளது என்பது குறித்தும் இந்தியாவின் ஆமை சர்வைவல் அலையன்ஸ் (டிஎஸ்ஏ) திட்ட இயக்குனர் ஷைலேந்திர சிங் விளக்கமளித்துள்ளார். ஆமை இதுபோன்று மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம் அதன் மரபணு மாற்றத்தால் ஏற்பட்ட நிறமி இழப்பின் காரணமாக இதுபோன்று நடந்திருக்கலாம் என தெரிவித்தார்.

இதனிடையே மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஆமையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக தொடங்கியுள்ளது. இதுபோன்று மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஆமையை இதுவரை தாங்கள் பார்த்தது இல்லை என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.