ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
கொலோடியன் பேபி! பிறந்தவுடனே குழந்தையின் உடலின் பல பகுதிகளில் வெடிப்புகள்! வேற்றுக்கிரகவாசியை போல் இருந்த குழந்தையின் தோற்றம்! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்!
மத்தியப் பிரதேசம் ரேவா மாவட்டம் சார்ந்த சக்காட் பகுதியில் நடைபெற்ற ஒரு அதிசய பிரசவம் தற்போது வைரலாகி வருகிறது. பிரியங்கா படேல் என்ற பெண், தன்னுடைய கர்ப்பத்தின் ஏழாம் மாதத்தில் திடீரென சாதாரண பிரசவம் மூலம் குழந்தையை பெற்றார். ஆனால், குழந்தையின் தோற்றம் பார்த்த உடனே மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பிறந்த சிசுவின் தோல் மிகவும் தடிமனாகவும், உடலின் பல பகுதிகளில் வெடிப்புகள் காணப்பட்டது. குழந்தை தோற்றம் "வேற்றுகிரகவாசி" என நினைக்கத் தூண்டும் வகையில் இருந்தது. உடனடியாக குழந்தை ரேவா காந்தி நினைவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது.
மருத்துவர்கள் இதை ‘ஹார்லெக்வின் இக்தியோசிஸ்’ (Harlequin Ichthyosis) என்ற அரிய மரபணு நோயாக கண்டறிந்துள்ளனர். இந்த தோல் நோய், குழந்தையின் தோலில் ஈரப்பதத்தை இழக்கச் செய்து வெடிப்புகளை ஏற்படுத்துகிறது. இது மிகவும் வலியுடனும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கக்கூடியதாகும்.
இதையும் படிங்க: மூன்று வயது குழந்தையை தலைகீழாக தூக்கி கொடூரமாக தெருவில் நடந்து சென்ற தந்தை! அதிரவைக்கும் காரணம்! நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி...!
மருத்துவமனையின் சிசு நலவியல் பிரிவு தலைவர் டாக்டர் நவீன் மிஸ்ரா, பெற்றோர் இருவரும் கேரியராக இருந்தால் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் எனத் தெரிவித்தார். தற்போது ஆக்ஸிஜன் ஆதரவு மற்றும் தீவிர கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த குழந்தை “கொலோடியன் பேபி” என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆண்டு ஒன்றுக்கு மட்டுமே ஏற்படும் மிகவும் அரிய மரபணு மாற்ற நோயாகும். சில நேரங்களில் மரபணு காரணமின்றியும் இந்நிலை உருவாகலாம். குழந்தையின் நிலை தற்போது நிலையான நிலையில் உள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிகழ்வு, மரபணு நோய்கள் குறித்த விழிப்புணர்வையும், விரைவான மருத்துவ கவனிப்பு ஏற்றத்தின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.