மூன்று வயது குழந்தையை தலைகீழாக தூக்கி கொடூரமாக தெருவில் நடந்து சென்ற தந்தை! அதிரவைக்கும் காரணம்! நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி...!



rampur-man-harasses-wife-dowry-viral-video

உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சு என்பவர், தனது மனைவியிடம் கார் மற்றும் பணம் போன்றவை வரதட்சணையாக வழங்க வேண்டும் எனக் கூறி, அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி, தனது பெற்றோர் அந்த அளவிற்கு பணம் தர இயலாது என்று கூறியதையடுத்து, சஞ்சு தொடர்ந்து மனைவியையும், குடும்பத்தினரையும் வேதனைப்படுத்தி வந்துள்ளார். சம்பவம் நடந்த நாளில், அவர் தனது மூன்று வயது குழந்தையை தலைகீழாக பிடித்துக் கொண்டு, கிராமம் முழுவதும் சுற்றிய சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, புகாரின் பேரில் போலீசார் சஞ்சுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மனைவியிடம் இருந்து கூடுதல் தகவல்களை பெற்று, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: மது போதையில் உள்ள வாலிபர்! தெருவில் சும்மா நின்ற பெண்ணை பிடித்து அதுவும் பட்ட பகலில்... அதிர்ச்சிகரமான வீடியோ!

இதையும் படிங்க: நண்பருடன் வீட்டுக்கு வந்த கணவன்! காணக்கூடாத காட்சியை நேரில் கண்ட மனைவி! தட்டி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! பகீர் சம்பவம்...