வெயில் தாங்க முடியல.... தலையில் பால் கேனை போட்ட வாலிபர்! கழுத்து வரை மாட்டிக்கிச்சு.... அய்யோ மூச்சு கூட விடக்கூட முடியல! மரண பயத்தை காட்டிய அந்த திக் திக் நிமிடங்கள்!!!
ராஜஸ்தானில் ரீல்ஸ் எடுக்க முயன்ற இளைஞர் ஒருவருக்கு எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டது. தலையில் போட்ட பால் கேன் கழுத்து வரை சிக்கி, பல மணி நேரம் அவதியுற்றார். பின்னர் கடை ஊழியர்கள் உதவியுடன் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
வேடிக்கைக்காக செய்த முயற்சி… ஆபத்தாக மாறியது
ஆழ்வார் மாவட்டம் மதோகார் கிராமத்தைச் சேர்ந்த காலுராம், நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். தகவலின்படி, கடும் வெயிலைத் தவிர்க்கவும் சிரிப்புக்காகவும் காலி பால் கேனை தலையில் போட்டுள்ளார். இதையே reels video ஆக பதிவு செய்ய நினைத்தபோது, அந்த கேன் தலையில் இறுக்கமாக மாட்டிக்கொண்டது.
இதையும் படிங்க: நள்ளிரவில் திருட வந்த வீட்டில் திக்குமுக்காடிய திருடன்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்டை பாருங்க... வைரல் வீடியோ!!!
குடும்பத்தினரின் முயற்சி தோல்வி
கேனை எடுக்க பலமுறை முயன்றும் முடியாமல் போனதால், காலுராம் மூச்சு விடவும் சிரமப்பட்டார். அருகில் இருந்த நண்பர்களும், பின்னர் குடும்பத்தினரும் உதவ முயன்றனர். ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இதனால் அங்கு பதற்றமான நிலை உருவானது.
கடை ஊழியர்கள் உதவி… பல மணி நேரத்திற்குப் பிறகு மீட்பு
இதையடுத்து, அருகிலிருந்த ஹார்ட்வேர் கடைக்கு அவரை அழைத்து சென்றனர். அங்குள்ள ஊழியர்கள் கருவிகளை பயன்படுத்தி மிக கவனமாக கேனை வெட்டினர். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு அவர் காயமின்றி மீட்கப்பட்டார். இந்த viral video சமூக வலைதளங்களில் பரவி, இளைஞர்களின் ஆபத்தான சாகசங்களைப் பற்றி மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது.
In a bizarre incident in Madhogarh village, Rajasthan, a man ended up with a milk can stuck on his head while trying to beat the heat and shoot a reel. Locals eventually removed it after much effort, and the video has since gone viral.#Rajasthan #ViralVideo #BizarreNews… pic.twitter.com/uAfpJZ9Qej
— IndiaToday (@IndiaToday) April 25, 2026