பிறந்தநாளுக்கு விருந்து கொடுப்பதாக வரவழைத்து பெண் கூட்டு பலாத்காரம்.! 4 ரயில்வே ஊழியர்கள் கைது.!

பிறந்தநாளுக்கு விருந்து கொடுப்பதாக வரவழைத்து பெண் கூட்டு பலாத்காரம்.! 4 ரயில்வே ஊழியர்கள் கைது.!


railway employees raped young women

புதுடெல்லி ரயில் நிலையத்தில் ரயில் தண்டவாள பராமரிப்புப் பணிகளுக்காக தண்டவாளம் அருகே அமைக்கப்பட்டிருந்த குடிசையில் வைத்து 30 வயது பெண்ணை ரயில்வே ஊழியர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்த  30 வயது பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து வேலை தேடி வந்தார். அப்போது ரயில்வே ஊழியரான சதீஸ் என்பவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அப்பெண்ணிற்கு சதீஸ் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சதீஸ் அப்பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் பேசிவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு விருந்து கொடுப்பதாக வரவழைத்து புதுடெல்லி ரயில் நிலையம் அழைத்து வந்து அங்கிருக்கும் பராமரிப்பு ஊழியர்களுக்கான குடிசையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு இரண்டு பேர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இருவர் குடிசைக்கு வெளியே காவலுக்கு நின்றுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்த நிலையில், குற்றத்தில் ஈடுபட்ட சதீஷ் குமார் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.