கொரோனாவால் அச்சத்தில் இருக்கும் பொதுமக்கள்! திடீரென ராகுல்காந்தி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கொரோனாவால் அச்சத்தில் இருக்கும் பொதுமக்கள்! திடீரென ராகுல்காந்தி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!


Rahul Gandhi talk about corona

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 6500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு,  தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருப்பதற்காக சுகாதாரத்துறை பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரோனாவிற்கு 3 பேர் பலியாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் 152 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த கொடூர வைரஸால் கர்நாடகா, டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் ஆகிய 3 மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாடு முழுவதும் பள்ளி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடங்கள் உட்பட மக்கள் கூட்டமாக கூடும் இடங்களை மூட மத்திய அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் நாடுமுழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் யாரும் கொரோனா குறித்த வதந்திகளை பரப்பி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், "நமது அரசாங்கத்தின் இயலாமையால் இந்தியா மிகப் பயங்கரமான விளைவை சந்திக்க போகிறது" என ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.