இந்தியா

உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தலில் ஈடுப்பட்ட பெண்கள்! கடைசியில் இப்படியா மாட்டி கொள்வது!

Summary:

Rabare

வெளிநாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வரும் பயணிகள் சிலர் தங்கம், பணம் போன்றவற்றை கடத்துவதை வழக்கமாக கொண்டு செயல்படுகின்றனர். அதனை மறைத்து எடுத்து வருவதற்கு பல பலவிதமான யுக்திகளையும் கையாளுகின்றனர்.

அதேபோல் மலேசியாவிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு சில பெண்கள் வந்துள்ளனர். அப்போது விமான நிலையத்தில் அவர்களை சோதித்துள்ளனர். அவர்களின் உடைமைகள் மற்றும் ஆளை சோதனை செய்த போது சில பெண்கள் தங்களது உள்ளாடைக்குள் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

அதில் திருச்சியை சேர்ந்த ஜெசிமா என்ற பெண் 766 கிராம் தங்கமும், பிரவின்பானு என்பவரிடம் 758 கிராம் தங்கமும், அசன் முகமது 799 கிராம் தங்கமும் மொத்தமாக 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து போலீசார் அவர்களை மேற்கொண்டு சோதனை செய்து வருகின்றனர். 


Advertisement