ஆண்ட்டி உங்களை பிடிச்சிருக்கு!! - பக்கத்து வீட்டு பெண்ணுக்கு மெசேஜ்‌.. தூக்கிப்போட்டு வெளுத்த கணவன்..!punjab-police-reply-to-tweet

அண்டை வீட்டாரின் மனைவிக்கு "உன்னை எனக்கு பிடித்திருக்கிறது" என மெசேஜ் அனுப்பிய இளைஞரை அடித்து நொறுக்கிய சம்பவம் நடந்துள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவரது பக்கத்து வீட்டில் திருமணமான தம்பதி வசித்து வரும் நிலையில், இந்த தம்பதிக்கு இளைஞர் மெசேஜ் அனுப்பியதாக தெரிய வருகிறது. அதாவது அந்த பெண்ணுக்கு "உன்னை எனக்கு பிடித்துள்ளது" என்று மெசேஜ் செய்துள்ளார். 

இந்த விஷயத்தையறிந்து ஆத்திரமடைந்த கணவன், இளைஞரின் வீட்டிற்கு வந்து அவரை அடித்து நொறுக்கியுள்ளார். இதற்காக வருத்தம் தெரிவித்த இளைஞர் மன்னிப்பும் கேட்ட நிலையில், அவர்கள் விடுவதாக தெரிவதில்லை. திரும்பி வந்து தங்களை தாக்கிடுவார்கள் என்ற பயத்தில் இருந்த இளைஞர் உதவி கேட்டு, தனக்கு நடந்த பிரச்சனையை பஞ்சாப் மாநில காவல்துறையினரின் டிவிட்டர் பக்கத்திற்கு தெரியுமாறு பகிர்ந்துள்ளார். 

மேலும், அதில் 'நான் பெண் ஒருவருக்கு தவறுதலாக மெசேஜ் அனுப்பி விட்டேன். அவரது கணவர் என்னை தாக்கி விட்டார். மீண்டும் தாக்குவார் என்று பயமாக இருக்கிறது என்று கூறி, உயிருக்கு அச்சம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்'. இது தொடர்பான பதிவிற்கு பதில் தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில காவல்துறை, 'பெண் ஒருவருக்கு தவறுதலாக நீங்கள் மெசேஜ் அனுப்பியது என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. 

பெண்ணின் கணவர் உங்களை தாக்கியிருக்கக் கூடாது. எங்களிடம் வந்து சேர்த்திருக்க வேண்டும். நாங்கள் சட்டத்தின் படி இரு தரப்பின் மீதும் நடவடிக்கை எடுத்திருப்போம். அருகில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது'. இந்த பதில் நெட்டிசன்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.