அரசியல் இந்தியா

#Breaking: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா.!

Summary:

#Breaking: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா.!

5 மாநில தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நலனுக்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மீ ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பிற 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 

காங்கிரஸ் கட்சிக்கு 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் பெரும் தோல்வியை தந்த நிலையில், மக்களின் முடிவை ஏற்றுக்கொள்வதாக அக்கட்சி தலைமை அறிவித்தது. ஆனால், இந்த தேர்தல் தோல்வி அக்கட்சியின் எதிர்கால நிலைத்தன்மையை சோதனை செய்துள்ளதால், கட்சி தலைமை எதிர்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அதன்படி, 5 மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் மாநில தலைவர்களின் தங்களின் பதவியை இராஜினாமா செய்ய தலைமை அறிவுறுத்தவே, அதன் பேரில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து பதவியை ராஜினாமா செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருப்பதற்கு முன்னர், அந்த பொறுப்பில் இருந்த முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு பல இன்னல்களை ஏற்படுத்தி, அவரை பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வைத்து புதிய கட்சி தொடங்க வழிவகை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement