பஞ்சாபில் பதற்றம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இரயில் மறியல் போராட்டம்.!

பஞ்சாபில் பதற்றம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இரயில் மறியல் போராட்டம்.!



Punjab farmers Protest 

 

கடந்த 2021ம் ஆண்டு மத்திய அரசு வேளாண் சட்டங்களை அறிமுகம் செய்த நிலையில், பஞ்சாப் மாநில விவசாயிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பெருமளவு திரண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர். 

இந்த போராட்டம் இறுதியில் வன்முறையில் முடிந்து அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர். மாதக்கணக்கில் அமைதியாக தொடர்ந்த போராட்டம், ஒரு கட்டத்திற்கு மேல் வன்முறைக்கு வித்திட்டது. டெல்லி செங்கோட்டையில் காலிஸ்தான் நாடு கேட்ட பிரிவினைவாதிகள் கொடியும் ஏற்றப்பட்டது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த Kisan Mazdoor Sangharsh அமைப்பை சேர்ந்த விவசாயிகள், வேளாண் சட்டம் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். 

அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று இரயில் மறியல் போராட்டம் அறிவித்து இருந்தனர். அவர்கள் அறிவித்தபடி இரயில் வழித்தடத்தில் மறியல் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ், தேவி தாஸ் புரா பகுதியில் விவசாயிகள் கூட்டமாக இரயில் தண்டவாளத்தின் நடுவே அமர்ந்து இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.