300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்.. நாய்கள் துரத்தியதில் சோகம்.. உயிர் ஊசல்..!

300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்.. நாய்கள் துரத்தியதில் சோகம்.. உயிர் ஊசல்..!


Punjab Child Slipped 300 Feet Bore Well

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கர்திவாலா பகுதியில் ரித்திக் என்ற 6 வயதுடைய சிறுவன் வயல் வெளியில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளான். அப்போது, சிறுவனை வெறிநாய்கள் துரத்தவே, பதறிப்போன சிறுவன் அங்கும் இங்கும் ஓடி இருக்கிறான். ஒரு கட்டத்தில் சணல் பையால் மூடப்பட்டு இருந்த ஆழ்துளை கிணற்றில் கால் இடறி விழுந்துள்ளான்.

300 அடி ஆழம் கொண்ட சிறுவன் 100 அடி ஆழத்தில் சிக்கிக்கொள்ள, தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர். மேலும், மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகள் துரிதமாக நடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அம்மாநில முதல்வர் ட்விட் செய்துள்ளார்.