இந்தியா

தனது காதலிக்காக விமான கழிவறையில் தொழிலதிபர் செய்த செயல்! திடீரென தரையிறக்கப்பட்ட விமானம்!

Summary:

punishment for flight passenger

மும்பையில் பிர்ஜு சல்லா என்ற தொழிலதிபர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மும்பையிலிருந்து டெல்லிக்கு சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்துள்ளார். விமானம் நடவெளியில் பறந்து கொண்டிருந்தபொழுது, விமானத்தை கடத்தப்போவதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு விமானம் கடத்தப்படும் என்றும் ஆங்கிலத்திலும், உருது மொழியிலும் எழுதி அந்த பேப்பரை விமானத்தில் உள்ள கழிவறையில் வைத்துள்ளார்.

அவர் எழுதிவைத்த அந்த கடிதத்தை விமான ஊழியர்கள் பார்த்துவிட்டு, விமானம் அவசரமாக அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது, விசாரணையில் பிர்ஜு சல்லாவின் விளையாட்டு வேலை என்பது வந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

flight inside க்கான பட முடிவு

விசாரணையில் அவர் கூறுகையில், டெல்லியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் தனது காதலி பணியாற்றி வருவதாகவும், இவ்வாறு மிரட்டல் கொடுத்தால் டெல்லி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, காதலி, மும்பை அலுவலகத்திற்கே வந்துவிடுவார் என்ற ஆசையில் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.

இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், குற்றவாளியான பிர்ஜு சல்லாவுக்கு 5 கோடி அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகை குறித்த விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும், ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் எந்த ஒரு விமானத்திலும் பறக்க முடியாது என்ற பட்டியலில் பிர்ஜு சல்லா சேர்க்கப்பட்டார்.


Advertisement