இந்தியா மருத்துவம் Corono+

கொரோனா அச்சுறுத்தல்: இந்தநேரத்தில் தேவையில்லாமல் இதனைசெய்து விபரீதத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள்!

Summary:

punishment for corona roomer

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை மீறினாலோ, கொரோனா குறித்து வதந்திகளை பரப்பினாலோ 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்தநிலையில், மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டது.  

இந்தநிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வருகிறவா்கள், விளையாடுகிறவா்கள், வாகனங்களில் செல்பவா்கள் ஆகியோரைக் கண்டறிந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

கொரோனாவால் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் போலியான தகவல்களும், சமூக வலைத்தளங்கள் மூலம் உலா வருகின்றன. இதனை போலீசார் திவிரமாக கண்காணித்து, வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், ஊரடங்கு உத்தரவை மீறும் எந்த நபரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.  இதேபோன்று வதந்தி பரப்பினாலும் அபராதத்துடன் கூடிய 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Advertisement