ஒவ்வொரு இந்தியனும் கொதித்தெழுந்த தினம் இன்று.! மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்.! வீரவணக்கம் செலுத்தும் இந்தியர்கள்.!

ஒவ்வொரு இந்தியனும் கொதித்தெழுந்த தினம் இன்று.! மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்.! வீரவணக்கம் செலுத்தும் இந்தியர்கள்.!



pulvama-attack

இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதிகளின் தற்கொலை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தநிலையில், புல்வாமா பயங்கரவாத தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவை இந்தியா இன்று அனுசரிக்கும் வகையில், புல்வாமா  தாக்குதலில் உயிர் துறந்த துணிச்சலான வீரர்களின் தியாகத்தை நாடு நினைகூர்ந்து வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.

கடந்த 2029 பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த தாக்குதலில் 40 வீரர்கள் மரணமடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காஷ்மீரில், 30 ஆண்டுகால போராட்டக் காலத்தில் நடந்த மிக பயங்கரமான தாக்குதலாகும் இது. இந்த தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்தத் தாக்குதலைக் கண்டு ஒவ்வொரு இந்தியனும் கொதித்தெழுந்தனர்.

Pulvama தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற நிலையில் இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. இந்திய விமானப்படை எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி அருகே இயங்கி வந்த பயங்கரவாதிகள் முகாமை குண்டு வீசித் தகர்த்தது. இதில் சுமார் 200க்கும்  மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த பதிலடி வீரர்களின் வீர மரணத்திற்கு பதிலாக அமைந்தாலும் நமது வீரர்களின் இழப்பு பேரிழப்பாக அமைந்தது.