அந்த கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவன்.. நிச்சயம் பலிக்கும்.! நம்பிக்கையில் நடிகர் சூர்யா!!
உயிரிழந்த ராணுவத்தினருக்கு 110 கோடி நன்கொடை; மாமனிதருக்கு குவியும் பாராட்டுகள்.!
உயிரிழந்த ராணுவத்தினருக்கு 110 கோடி நன்கொடை; மாமனிதருக்கு குவியும் பாராட்டுகள்.!

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு 110 கோடி நன்கொடையாக அளித்துள்ளார் பார்வையற்ற மாற்றுத் திறனுடைய விஞ்ஞானி ஒருவர்
புல்வாமாவில் கடந்த 14ம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது கோழைத்தனமாக தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், 40க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோடாவை பூர்வீகமாகக் கொண்டவர் பிறவியிலேயே பார்வையற்ற மாற்றுத் திறனாளியானவர் முர்தஸா ஹமீது. கடினமான சூழ்நிலையில் அரசு கல்லூரியில் பொருளாதாரம் படிப்பை முடித்தார். மும்பையில் ஆய்வு கூடம் ஒன்றை அமைத்துள்ளார் இதன்மூலம் எரிபொருளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு கொண்டு வாகனங்கள் செல்லும் பாதையை கண்டுபிடித்துள்ளார். இதனை நாட்டுக்கு அர்ப்பணித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்காக
ரூ.110 கோடி தொகையை தன்னந்தனியாக வசூலித்துள்ளார். இத்தொகையை நன்கொடையாக அளிப்பது தொடர்பாக கடந்த பிப் 27ம தேதி பிரதமர் மோடிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
தற்போது அந்த தொகையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் அளித்துள்ளார். தன் உயிரை கொடுத்து நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்காக இந்த தொகையை கொடுப்பதில் பெருமிதம் அடைகிறேன் என முர்தஸா ஹமீது தெரிவித்துள்ளார். இதனால் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அந்த மாமனிதருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.