புதுச்சேரி மாநில எல்லைகளுக்கு இன்று முதல் சீல்! முதலமைச்சர் அதிரடி!

புதுச்சேரி மாநில எல்லைகளுக்கு இன்று முதல் சீல்! முதலமைச்சர் அதிரடி!



puduchery-border-will-be-closed

கொரோனா தொற்று நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சியில் நேற்று உரையாடினார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்தபடி முதல்வர் நாராயணசாமியும் இந்த உரையாடலில் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கொரோனா ஊரடங்கால் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஆளும் கட்சி மாநிலங்களாக இருந்தாலும் , எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களாக இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுவதால் கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி வருகிறோம்.

புதுச்சேரியில் உள்ளூர் மக்களால் கொரோனா தொற்று பரவவில்லை. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருவோர்களால் தான் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. ஆரம்பத்தில்  14 நாள்கள் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் , எல்லைகளை திறந்துவிட்டதால் வெளிமாநிலத்தவர்கள் மூலம் கொரோனா தொற்று வேகமாக பரவிவிட்டது.

pondicheri

எனவே புதுச்சேரி  மாநில எல்லைகள் புதன்கிழமை (ஜூன் 17) முதல் முழுவதுமாக மூடப்படும். சென்னை, விழுப்புரம், கடலூரில் இருந்து புதுச்சேரி வரும் எல்லைகளும், நாகை, மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் வரும் எல்லைகளும் மூடப்படும். புதுச்சேரிக்குள் வெளிமாநில மக்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். 

மருத்துவம், திருமணம், துக்க நிகழ்ச்சிகளுக்காக புதுச்சேரிக்குள் வருபவர்களுக்கு இ - பாஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி இ - பாஸுடன்  வருவோர்களும் 15 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என முதல்வர் நாராயணசாமி கூறினார்..