இந்தியா

தனியாக வரும் இளம்பெண்ணை வற்புறுத்தி வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்கும் சைக்கோ! ரயில்நிலையத்தில் பரபரப்பு!

Summary:

Psycho forcing the young girl and forcibly kissing

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மாதுங்கா ரயில் நிலையத்தில் ஆளில்லாத நேரத்தில் நடைமேடையில் நடந்து சென்ற ஒரு இளம்பெண்ணை பின்தொடர்ந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

அந்த பெண்னை வற்புறுத்தி கீழே தள்ளிவிட்டு முத்தம் கொடுத்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி பதிவுகளை பார்த்த ரயில்வே போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து மேற்கொண்ட விசாரணையில் பல இளம்பெண்களிடம் அந்த இளைஞர் இவ்வாறு செயல்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் காணப்பட்ட அந்த நபர் பல திருட்டு மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர் என்று தகவல் தெரிய வந்ததை அடுத்து போலீசார்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இதற்கு பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இதுவரை அவன் மேல் வழக்கு பதியவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்தநிலையில், பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்ளும் அந்த சைக்கோ நபரை விரைவில் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Advertisement