சமையலறையில் கிடந்த மண்டைஓடு..! மெழுகுவர்த்தி..! சினிமா பாணியில் நடந்த சம்பவம்.!

தனது மாணவி ஒருவரை ஆசிரியரே கடத்தி சென்று திருமணம் செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த 21 வயதான மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார்.
அதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக வேலை செய்துவந்த கிருஷ்ண மோகன் (33) என்பவர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்ததோடு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மாணவியிடம் கேட்டுள்ளார். அதற்கு மாணவி தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவந்துள்ளார்.
இந்நிலையியல், கல்லூரி முடிந்து பெங்களூரில் தங்கி அந்த மாணவி கம்ப்யூட்டர் வகுப்பு சென்று வந்துள்ளார். இதனை தெரிந்துகொண்ட கிருஷ்ண மோகன் அங்கும் சென்று மாணவிக்கு தொல்லைகொடுத்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
மாணவியை உடனே ஊருக்கு வருமாறு பெற்றோர் தெரிவிக்க, பெங்களூரில் இருந்து மாணவி ஊருக்கு சென்றுள்ளார். அங்கும் சென்ற கிருஷ்ண மோகன் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து மாணவியின் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்து மாணவியை கடத்தி சென்றுள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, மாணவியின் வீட்டிற்கு வந்த போலீசார் வீட்டை சோதனை செய்ததில் வீட்டின் சமயல் அறையில் மண்டை ஓடு, எலும்பு துண்டுகள் போன்றவை கிடந்ததோடு கேஸ் திறந்த நிலையில் அருகில் மெழுகு திரி ஓன்று எரிந்து கொண்டிருந்துள்ளது.
இதனை அது பதறிப்போன போலீசார் கேஸை அணைத்துவிட்டு, கிருஷ்ண மோகன், மாணவியை தேடும் பணியில் தீவிரமாக இறங்கினர். இறுதியில் வேலூர் ரயில் நிலையில் கிருஷ்ண மோகனை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கேஸ் சிலிண்டர் வெடித்து மாணவி இறந்துவிட்டது போல் காண்பிக்க இவ்வாறு செட்டப் செய்ததாக கூறியுள்ளார். பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.