பிரதமர் பயண ரத்து விவகாரம்... பஞ்சாபில் குடியரசு தலைவர் ஆட்சி?.. குடியரசுத்தலைவரை சந்திக்கும் பிரதமர்.!

பிரதமர் பயண ரத்து விவகாரம்... பஞ்சாபில் குடியரசு தலைவர் ஆட்சி?.. குடியரசுத்தலைவரை சந்திக்கும் பிரதமர்.!



Prime Minister Narendra Modi Punjab Program Cancel Issue President Condemn PM Meet Shortly President

பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயண பாதுகாப்பு குறைப்புக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். பரபரப்பான சூழ்நிலையில் குடியரசு தலைவரை பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸிப்பூர் ஹுசைனிவாலா நகரில் நடைபெறவிருந்த ரூ.1000 கோடி முதலீடு திட்டங்களுக்கான வளர்ச்சிப்பணிகள் தொடர்பான நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள பயணம் மேற்கொண்டு இருந்தார். பிரதமர் மோடியின் வாகனம் அங்குள்ள பாலத்தில் செல்கையில், சாலையில் திடீரென போராட்டக்குழுவினர் இடைமறித்தனர். இதனால் காரிலேயே காத்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் மாநில முதல்வருக்கு தொடர்பு கொண்டு போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆலோசனை கூற முற்பட்டுள்ளார்.

ஆனால், பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பிரதமரின் அழைப்பை எடுக்காமல் இருந்துள்ளார். 20 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர் மோடி, வளர்ச்சித்திட்ட தொடக்க பணிகளில் கலந்துகொள்ளாமல் டெல்லிக்கு திரும்பியுள்ளார். பிரதமரின் பயண வழியில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக டெல்லி திரும்பவேண்டிய நிலை ஏற்படவே, உள்துறை அமைச்சகம் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது. மேலும், இதுகுறித்து விளக்கமும் கேட்டு இருந்தது. 

Prime minister

இந்த நிலையில், பிரதமர் மோடியின் பயண வழி மறுப்பு, போராட்டம் காரணமாக பஞ்சாப் மாநில அரசியலில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்காக தனது உயிரையும் தருவேன் என பஞ்சாப் மாநில முதல்வர் பேட்டியளிக்க, அம்மாநில பாரதிய ஜனதா கட்சி பஞ்சாப் மாநில உள்துறை அமைச்சக அதிகாரிகள், மாநில தலைமை காவல் ஆணையர் ஆகியோரை ஆளுநர் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், மாநிலத்தில் குடியரசுத்தலைவரின் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன.

இந்த பரபரப்புக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் பயண பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் கடுமையான கண்டனத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதிவு செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க இருப்பதாக அரசுத்துறை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பஞ்சாப் மாநிலத்தின் அரசு கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமலாகுமா? என்ற பரபரப்பு உருவாகியுள்ளது. 

Prime minister

பஞ்சாப் மாநில அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு, 3 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பஞ்சாப் பாஜக, மாநில அரசு அமைத்துள்ள விசாரணை குழு தேவையற்றது. அவர்கள் விசாரணையும் சரியாக நடத்தமாட்டார்கள் என்று கூறி வருகிறது.