இந்தியா

கொரோனோவை அழிக்க அம்மனே கூறியதாக, கோவில் சன்னதியில் பூசாரி செய்த காரியம்! பகீர் சம்பவம்!

Summary:

Priest arrested for murder in temple

ஒடிசா மாநிலம் கட்டாக் நகர் அருகேயுள்ள நரசிங்கப்பூர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் சன்சாரி ஓஜா. 70 வயது நிறைந்த இவர் அப்பகுதியில் அமைந்துள்ள பிராமணிதேவி கோயிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை அந்தக் கோயிலுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வந்த சரோஜ்குமார் பிரதான் என்ற 55 வயது நபர் தலைதுண்டாகி இரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையில் சரோஜ்குமாரை தான்தான் கொன்றதாக கோயில் பூசாரி சன்சாரி ஓஜா நேற்று காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில், கொரோனா வைரசை ஒழிக்க நரபலி கொடுக்க வேண்டுமென அம்மன் தனது கனவில் வந்து கூறியதாகவும், அதனை நிறைவேற்றவே தான் சரோஜ்குமாரை கோவிலுக்கு அழைத்துசென்று  கொன்றதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இருவருக்குமிடையே முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.


Advertisement