ஆண் நோயாளி கர்ப்பமா? அதிர்ச்சியடைந்த லேப் டெக்னீஷியன்! பதறிப்போன நோயாளி!

ஆண் நோயாளி கர்ப்பமா? அதிர்ச்சியடைந்த லேப் டெக்னீஷியன்! பதறிப்போன நோயாளி!


pregnancy-test-for-men


ஜார்கன்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்ற ஆண் நோயாளிக்கு கர்ப்ப பரிசோதனை செய்யச் மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் கஞ்சு ஆன் நபர் வயிற்றுவலி ஏற்பட்டு அதற்காக மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு ஒருசில பரிசோதனை செவியுமாறு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் முகேஷ் குமார் சீட்டு எழுதி கொடுத்துள்ளார்.

preganancy test

அந்த சீட்டை எடுத்துக்கொண்டு ஆய்வகத்திற்கு சென்று லேப் டெக்னீஷியனிடம் காட்டியுள்ளார். மருத்துவர் எழுதி கொடுத்த அந்த சீட்டை பார்த்து லேப் டெக்னீஷியன் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனெனில் அதில் பெண்களுக்கு செய்யப்படும் கர்ப்ப பரிசோதனை செய்யுமாறு எழுதியிருந்துள்ளது.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த கோபால் கஞ்சு மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் புகார் கூறியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மருத்துவர் முகேஷ் குமார் மறுத்துள்ளார் என தெரிவிக்கின்றனர்.