அந்த கோலத்தில் அம்மாவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த 8 வயது மகன்! கள்ளக்காதலனின் பேச்சைக் கேட்டு தாய் செய்த கொடூரம்! பகீர் சம்பவம்...!!



prayagraj-mother-and-lover-arrested-after-son-murder

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8 வயது மகன், தாயின் கள்ள உறவை பார்த்துவிட்டதால், அந்தச் சிறுவனை தாயும் அவரது காதலனும் சேர்ந்து கொன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் விபத்து என நாடகமாடப்பட்ட இந்த மரணம், பின்னர் குழந்தைகளின் வாக்குமூலத்தால் வெளிச்சத்துக்கு வந்தது.

பிரயாக்ராஜின் முண்டேரா பகுதியில் வசித்து வந்த சீமா என்ற பெண், தனது காதலன் உபைதுடன் வீட்டில் இருந்தபோது, அவரது மகன் அயன் அதை பார்த்ததாக கூறப்படுகிறது. தகவலின்படி, இந்த உறவு வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தில், இருவரும் சேர்ந்து சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மாமன் மகனுடன் அடிக்கடி உள்ளாசம்! நேரில் பார்த்து கண்டித்த தாய்! 8 மாதங்களுக்கு பிறகு! செப்டிக் டேங்கில் கிடந்த..... திடுக்கிடும் சம்பவம்!

விபத்து என கூறி நாடகமாடிய தாய்

இதையடுத்து, சிறுவன் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக சீமா அக்கம் பக்கத்தினரிடமும் காவல்துறையிடமும் தெரிவித்தார். ஆனால், அயனின் தம்பிகள் போலீசாரிடம் கூறிய தகவல்கள் வழக்கின் திசையையே மாற்றின. தங்கள் கண் முன்னாலேயே அண்ணன் தாக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், உண்மையை வெளியே சொல்லக்கூடாது என்று மற்ற குழந்தைகளையும் சீமா மிரட்டியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாக்குமூலத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்

காவல்துறையால் கைது செய்யப்பட்ட பிறகு, சீமா அளித்த வாக்குமூலம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. “என் கணவர் ஏற்கனவே என்னை விட்டு பிரிந்துவிட்டார். இப்போது என் மகனும் இறந்துவிட்டான். இனிமேல் என் காதலனையும் இழக்க விரும்பவில்லை” என்று அவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்ட காதலர்கள்

இந்த வழக்கில் உபைத் மற்றும் சீமா இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: "கணவனைக் கொல்ல 1 லட்ச ரூபாய்..." மருமகனுடன் கள்ள உறவு.!! மனைவியின் கொடூரம்.!!