இந்தியா Covid-19

கொரோனா பாதிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்கள் தொடர்ந்து கவலைக்கிடம்..!

Summary:

Pranab Mukherjee Covid positive Still Critical After Brain Surgery

 கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட முன்னாள் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகம்  முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைஸிற்கு பொதுமக்கள் தொடங்கி, பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் என பலரும் பாதிக்கப்பட்டுவருகின்றனர் . இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மூளையில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்ப்பட்ட அடைப்பு காரணமாக அறுவை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரணாப் முகர்ஜி. இதனை அடுத்து அவருக்கு கடந்த திங்கள்கிழமை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு அடைப்பு நீக்கப்பட்டது. அதேசமயம் அவருக்கு கொரோனா இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்பிற்கு பிறகு தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவரது உடலைநிலை தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்போது 84 வயதாகும் பிரணாப் முகர்ஜி அவர்கள் 25 ஜூலை 2012 முதல் 25 ஜூலை 2017வரை இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement