இந்தியா காதல் – உறவுகள்

கைக்குழந்தையுடன் காதலனை தேடி ஊர்ஊராக அலைந்த இளம்பெண்! பின் நேர்ந்த கண்கலங்க வைக்கும் சோகம்!.

Summary:

poor girl searched lover with baby

பங்களா தேசத்தை பூர்விகமாக கொண்டவர் ரீபாராணி. 25 வயது நிறைந்த அவர் இளமையிலேயே தனது குடும்பத்தை இழந்து வறுமையின் பிடியில் சிக்கி தவித்துள்ளார். இந்நிலையில் பிழைப்பிற்காக அவர் இந்தியா முழுவதும் சுற்றி இருந்துள்ளார். அப்பொழுது தனது பயணத்தின்போது அவருக்கு இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரீபாராணி அவரை முழுமையாக நம்பி ஏமாந்துள்ளார்.  இதில் அப்பெண்ணுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது . 

இந்நிலையில் ரீபாராணியின் காதலன் அவரை விட்டுவிட்டு ஓடியுள்ளார். இந்நிலையில் கைக்குழந்தையுடன் ரீபா தனது காதலனை தேடி பல இடங்களிலும் அலைந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் பேருந்து நிலையத்தில் கைக்குழந்தையுடன் ரீபாராணி உறங்கிக்கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது கைகலப்பாக மாறிய நிலையில் ரீபாவின்  குழந்தை உயிரிழந்தது.இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட ரீபா தொடர்ந்து பல இடங்களிலும் தனது காதலனை தேடியுள்ளார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் சேலம் வந்தடைந்துள்ளார். பின்னர்  போலீசார் அவரை மீட்டு   கருப்பூரிலுள்ள போதிமரம் ஆதரவற்ற பெண்கள் நல மையத்தில் சேர்த்துள்ளனர். இச்செய்தி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


Advertisement