இந்தியா

நைட் வாட்ச்மேன், பகலில் வழிப்பறி திருடன்.. எதிர்கால சிந்தனையுடன் செயல்பட்ட திருடனின் பகீர் செயல்.!

Summary:

நைட் வாட்ச்மேன், பகலில் வழிப்பறி திருடன்.. எதிர்கால சிந்தனையுடன் செயல்பட்ட திருடனின் பகீர் செயல்.!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரெட்டியார்பாளையம், கம்பன் நகரில் வசித்து வருபவர் மூதாட்டி முத்தாலு (வயது 60). இவர் கடந்த நவம்பர் மாதம் பேத்திக்கு வீட்டு வாசலில் உணவு கொடுத்துக்கொண்டு இருக்கையில், விலாசம் கேட்பது போல வந்த மர்ம நபர் மூதாட்டியின் 4 சவரன் நகையை பறித்து சென்றுள்ளார். அதே நாளில், வில்லியனூர் பகுதியில் ஆசிரியையிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக இருவரும் ரெட்டியார்பாளையம் மற்றும் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இரண்டு இடங்களில் நடந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதும் ஒரே நபர்கள் என்பது உறுதியாகவே, கடந்த 2 மாதமாக மர்ம நபருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் ரெட்டியார்பாளையம் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது, வாகன பதிவெண் இல்லாமல் வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி விசாரணை செய்துள்ளனர். அப்போது, அவர் மேற்கூறிய குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவரை போல இருக்க, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில், அவரே குற்றவாளி என்பது உறுதியானது.

புதுச்சேரியில் உள்ள திலாசுப்பேட்டை பகுதியை சேர்ந்த அசோக் (வயது 43) என்பதும், அரசு சார்பு பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும், திலாசுப்பேட்டையில் பகுதி நேரத்தில் இறைச்சி கடையும் நடத்தி வந்துள்ளார். ஒருகட்டத்தில் கடனாளியாக அசோக், கடனை அடைக்க திருட தொங்கியுள்ளார். 

திருடிய நகையை வைத்து ஆடம்பரமாக வாழாமல், மனைவி மற்றும் குழந்தைகள் பெயரில் வைப்பு நிதியை தொடங்கி இருக்கிறார். திருடிய நகையை கொஞ்ச கொஞ்சமாக விற்பனை செய்ய இறைச்சி கடை கழிவுடன் சேர்த்து மூடையாகவும் கட்டி வைத்துள்ளார். அவரிடம் இருந்து ரூ.10 இலட்சம் மதிப்புள்ள 23 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது அசோக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 


Advertisement